எமது கல்லூரியின் கடந்த 2014ம் ஆண்டு இணைந்து கொண்டு தமது இஸ்லாமிய மற்றும் கா.பொ.த (உ/த) கலைப் பிரிவில் கல்வி கற்று மிகவும் வெற்றிகரமாக பூர்த்தி செய்த 17 மாணவிகளுக்கான விடுகை விழா கடந்த 06.01.2019ம் திகதி நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் ஜே. இர்சாத் (ஷர்கீ ,BA(Hons), MA, அவர்களின் தலைமையில் கல்லூரியின் கூட்ட மண்பத்தில் இடம் பெற்ற குறித்த விழாவில் கல்லூரியின் ஸ்தாபகர் நிறைவேற்றுத் தலைவர் அஷ்ஷேஹ் எம்.எல் ஹாஷீம் சூரி மதனி அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் கல்லூரியின் நிருவாக சபையின் இணைத் தலைவர் அஷ்ஷேஹ் ஏ.எல் மஃசூம் (அஸ்ஸஹ்வி) மற்றும் கல்லூரியின் ஆளுனர் சபை உறுப்பினர்கள் பெற்றோர்கள், முன்னால் ஆசிரியர்கள் , ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் கல்லூரியின் ஸ்தாபகர், தலைவர் மற்றும் அதிபர் ஆகியோர்களுக்கு மணாவிகள் நினைவுச் சின்னம் வழங்கி வைத்தோடு முன்னால் அதிபர்களான அல் ஆலிமா சித்தி மர்வா (அஸ்ஸஹ்விய்யா), ஆலிமா சலீமா ஆகியோர் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் பொண்ணாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.